சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குனர்! – புவியரசன் பணி மாற்றம்!
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் வானிலை உள்ளிட்டவற்றை கணித்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக் கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். செந்தாமரை கண்ணன் வகித்து வந்த காலநிலை மாற்ற மைய இயக்குனர் பதவிக்கு புவியரசன் மாற்றப்பட்டுள்ளார்.