தனுஷ் - கார்த்திக் நரேன் பட ஷூட்டிங் எப்போது தெரியுமா??
நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து நடிகர் தனுஷின் அத்ரங்கி ரே மற்றும் கர்ணன் ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு விரைவில் அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குமெனதெரிகிறது. இதற்காக தனுஷ் த்னது தேதிகளை ஒதுக்கியுள்ளார்.
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது, இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், விஜய் பட நாயகி மாளவிகா மோகனன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.