புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (22:34 IST)

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த அடுத்த அப்டேட்

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’சுருளி’ என்ற படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ’பட்டாஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்
 
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ’சுருளி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்து சமீபத்தில் படக்குழுவினர் அனைவரும் இந்தியா திரும்பினார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இந்த படப்பிடிப்பு ஜனவரி 3 வரை நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படப்பிடிப்பில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை முடித்தவுடன் மாரிசெல்வராஜ் இயக்கவுள்ள கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகிவரும் ’சுருளி’ படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பவர் நடித்துள்ளார் மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுகுட்டி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது