1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (19:52 IST)

’எனை நோக்கி பாயும் தோட்டா’ செய்த மோசமான சாதனை!

தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்தப் படம் இந்த வாரமே கிட்டதட்ட அனைத்து திரையரங்குகளிலும் தூக்கப்படும் நிலையில் திரையரங்குகள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த படம் ஓரளவுக்கு நல்ல பாஸிட்டிவ் நடைபெற்று வந்தது என்பதும், சமூக வலைதள பயனாளர்களும், விமர்சகர்களும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை தந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியான நிலையில் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்களும் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால் இந்த படத்திற்கு சுத்தமாக ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வராததால் தியேட்டர்கள் காலியாக இருப்பதாகவும் வரும் வெள்ளியன்று இந்த படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90 சதவீத திரையரங்கில் இருந்து தூக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தான், தனுஷ் நடித்த படங்களிலேயே மிக அதிக வசூல் பெற்ற படம் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் அவரது அடுத்த படமே அதற்கு நேர் எதிரான ஒரு மோசமான சாதனையை பெற்றுள்ளது. ஆம் தனுஷ் நடித்த படங்களிலேயே மிகவும் குறைவான வசூலைப் பெற்ற படம் இந்த படம்தான் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன