திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (15:45 IST)

த க்ரே மேன் கெட்டப்பில் தனுஷ்… கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான த க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் அவர் இப்போது அமெரிக்காவில் அவர் நடிக்கும் த க்ரே மேன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உடனே ரசிகர்கள் இதுதான் அந்த படத்துக்கான கெட்டப் என்று கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.