திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (10:17 IST)

தனுஷ் இயக்கும் படத்தில் கதாநாயகியாக இணையும் அனிகா சுரேந்திரன்!

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

இதையடுத்து தனுஷ் மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் கதாநாயகனாக அறிமுகமாக, தனுஷ் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் சில நடிகர்களும் இணைந்துள்ளனர். அதில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மலையாள நடிகரான மேத்யு தாமஸ் மற்றும் பிரியா வாரியர் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.