திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (07:50 IST)

கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ ரிலீஸுக்கு தயார்… இயக்குனர் கொடுத்த அப்டேட்!

கார்த்திக் நரேன் தன்னுடைய முதல் படமான ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான’மாறன்’ கடந்த மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. வெளியான உடனே மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதிகளவு சமூகவலைதளங்கள் ட்ரோல் ஆனது. சமீபகாலத்தில் இந்தளவு ட்ரோல்களை சந்தித்த படம் எதுவும் இல்லை என்ற அளவுக்கு ஆனது.

இந்நிலையில் மாறன் படத்துக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அதர்வா, சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோரை வைத்து ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் முன்பே முடிந்துவிட்டாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் ரிலீஸ் வேலைகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது இந்தப் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என இயக்குனர் கார்த்திக் நரேன் அறிவித்துள்ளார்.