திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:24 IST)

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத தனுஷ் – உறவில் விரிசலா?

நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ஆனால் அதற்கு அவரின் மூத்த மருமகன் தனுஷ் வாழ்த்து சொல்லவில்லை.

நடிகர் ரஜினிகாந்தின் 71 ஆவது பிறந்த நாள் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது ரஜினியின் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து தங்கள் வாழ்த்துகளை வெளிப்படுத்தினர். மேலும் சக கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என எல்லோரும் சமூகவலைதளங்கள் மூலமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ரஜினியின் மூத்த மருமகனும் நடிகருமான தனுஷும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

வழக்கமாக ரஜினிக்கு பிறந்தநாளில் தனுஷ் வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த முறை அவர் சொல்லாததால் அவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனைகள் எழுந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்தன. தனுஷ் ரஜினியை வைத்து காலா படத்தை தயாரித்தார். அந்த படத்தின் மூலம் பெரும் நஷ்டமும் அடைந்தார். அது சம்மந்தமாக தனுஷுக்கு ரஜினி மேல் சில மன வருத்தங்கள் உள்ளதாக கோலிவுட்டில் சொல்லப்படுகிறது. ஆனால் வேறு சிலரோ ரஜினி அரசியல் வருகை குறித்து அறிவித்தது சம்மந்தமாக கருத்து வேறுபாடு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.