லேட்டா டல்லா வந்த தனுஷ்: மச்சினி திருமணத்தில் விருப்பமில்லையோ...?
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ் தாமதமாக கலந்துக்கொண்டார்.
ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ஆம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நடந்து முடிந்தது.
திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன. ஆனால், அதில் தனுஷை மட்டும் காணவில்லை.
விசாரித்ததில் தனுஷ் தாமதமக வந்தாகவும், மிகவும் நார்மலான உடை அணிந்து வந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் குடும்பத்துடன் எந்த புகைப்படமும் எடுத்துகொள்ளவில்லையாம், அங்கு அவருடன் அவரது ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டும்தான் வெளியாகியுள்ளது.
தனுஷ் இப்படி தாமதமாக வந்ததற்கும் சாதாரண உடையில் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேலை படப்பிடிப்பின் காரணமாக தாமதமானதா? அல்லது இந்த திருமணத்தில் தனுஷுக்கு ஏதேனும் மனஸ்தாபம் உள்ளதா? என தெரியவில்லை.