1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (10:54 IST)

‘தேவ்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

கார்த்தி ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் ‘ தேவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.  


 
‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசசையில் தாமரையின் வரிகளில், ‘அனங்கே’ என்று தொடங்கும்  ஆடியோ பாடல்   வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே மிக அதிகப்படியான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.    ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் இந்த பாடலை பாடியிருந்தனர். 6 நிமிடம் கொண்ட இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
 
அறிமுக இயக்குனர் ராஜத் ரவிஷங்கர் தேவ் படத்தை இயக்கி உள்ளார். ஆக்ஷன், வீரம், காதல் அனைத்தும் கலந்த இப்படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரித் சிங்,  பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, கார்த்திக் முத்துராமன், நிக்கி கல்ராணி, ரேணுகா, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.