1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (17:34 IST)

வெளியானது ! "பேட்ட பராக்" லிரிக் வீடியோ!

"பேட்ட பராக்" என்ற பாடலின் லிரிக் வீடியோ மற்றும் பேட்ட தீம் மியூசிக் இன்று வெளியானது.


 
'பேட்ட' படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. உலகம் முழுக்க பொங்கலுக்கு வெளிவரப் போகும் பேட்ட படத்துக்கான வியாபாரம் இப்போதே சூடுபிடித்து விட்டது.
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
 
ரஜினியுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
 
படத்தில் இடம்பெறவுள்ள அனைத்து  பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று காலை வெளியானது.
 
இந்நிலையில் தற்போது,  இப்படத்தில் இடம்பெற்றுள்ள "பேட்ட பராக்" என்ற பாடலின் லிரிக் வீடியோ மற்றும் பேட்ட தீம் மியூசிக் வெளியாகி இணையத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது . மேலும் விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.