1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (19:55 IST)

ஒரே நாளில் கார்த்தியின் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு

நடிகர் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அவர் தற்போது 'தேவ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ரகுல் ப்ரித்திசிங் நாயகியாக நடித்த இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'தேவ்' படத்தின் சிங்கிள் பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த பாடல் நிச்சயம் பெரும் வரவேற்பை பெரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தியின் 18வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான 'மாநகரம்' என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியே இல்லை என்பதும் இதுவொரு முழுநீள அதிரடி ஆக்சன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் கார்த்தியின் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.