1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (16:16 IST)

ஹீரோக்களைவிட அதிகம் சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தன்னுடன் படத்தில் நடிக்கும் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
வழக்கமாக ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட ஹீரோயின்கள் சம்பளம் குறைவாக இருக்கும். நடிகைகளுக்கு மத்தியில் இது  குற்றம்சாட்டாகவே இருந்து வருகிறது.
 
இந்நிலையில் பத்மாவதி படத்திற்காக தீபிகா படுகோன் 13 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் இதே படத்தில் நடித்துள்ள ரன்வீர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த தகவல் தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சம்பள விஷயத்தை பற்றி பேச மறுத்துவிட்டார் தீபிகா.