ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2017 (21:11 IST)

சம்பளத்தை குறைத்த நயன்தாரா: காரணம் என்ன?

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அதோடு அதிக சம்பளம் பெரும் நாயகியாகவும் உள்ளார்.


 
 
ஹிரோவுக்கு இணையான கேரக்டரில் நடிக்க விரும்பும் நயன்தாரா பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியதுவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 5 முதல் 6 கோடி ரூபாய் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அவர் தனது சமபளத்தை குறைத்து உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அறிவழகன் இயக்கும் புது படத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் கொடுத்துள்ளார். ஒன்லைன் கதையை கேட்டு வழக்கம் போல்  பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டாராம். 
 
ஆனால், சில வாரங்களுக்கு பிறகு முழு கதையையும் கேட்ட அவர், தன் கேரக்டரின் தன்மையை கருத்தில் கொண்டு சம்பளத்தை கணிசமாக குறைத்திருக்கிறாராம்.