திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (17:16 IST)

சம்பளத்தைக் குறைத்த தகதக நடிகை

வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தகதக நடிகை தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துவிட்டார் என்கிறார்கள்.


 

 
பிரமாண்டமாக வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்த சரித்திரப் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் தகதக நடிகை. அந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடிகைக்கு ஏகப்பட்ட ஸ்கோப். எனவே, தன்னுடைய சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார்.
 
ஆனால், இரண்டாம் பாகத்தில் ஒரு காட்சியில் மட்டுமே தலைகாட்ட வாய்ப்பு கிடைத்தது. எனவே, இவரை மறந்துவிட்டு இன்னொரு ஹீரோயினைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இதனால், நடிகையைத் தேடி ஒரு வாய்ப்பு கூட வரவில்லையாம்.
 
எனவே, தன்னுடைய சம்பளத்தை ஒரு கோடியில் இருந்து 60 லட்சமாகக் குறைத்துவிட்டாராம். அப்படியும் எந்த வாய்ப்பும் வரவில்லை என்கிறார்கள். நடிகை நடித்துள்ள ஒரு தமிழ்ப் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.