1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (07:41 IST)

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர்தான்.. 2வது, 3வது இடம் யாருக்கு?

cooku with comali
கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்று இறுதி போட்டியின் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 
 
சுமார் 5 மணி நேரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மைம் கோபி டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அவருக்கு கோமாளி ஆக செயல்பட்ட குரேஷி மற்றும் மோனிஷாவுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக குக் வித் கோமாளி வரலாற்றில் ஒரு ஆண் டைட்டில் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து இந்த சீசனின் இரண்டாவது இடம் நடிகை ஸ்ருஷ்டி டாங்காவுக்கும், மூன்றாவது இடம்  நடிகை விசித்ராவுக்கும் கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் பட்டம் வென்ற மைம் கோபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva