1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (11:41 IST)

மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த மணிமேகலை - சந்தோஷத்தின் உச்சத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக கலந்துக்கொண்டு வந்தவர் மணிமேகலை. அவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் 
 
இதனிடையே சில நாட்களுக்கு மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தான் எனது கடைசி நிகழ்ச்சி என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி கலந்து கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் ரசிகர்கள் மணிம்கேகளை இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்க முடியாது என நெட்டிசன்ஸ் கூறி வந்தனர். 
 
இந்நிலையில் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் இந்த வார நிகழ்ச்சியில் புரொமோவில் மணிமேகலை வந்துள்ளார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் செம குஷி ஆகி இந்த ப்ரோமோவுக்கு அதிக லைக்ஸ் குவித்து நிகழ்ச்சிக்கு ஆர்வமாக உள்ளோம் என கூறி வருகிறார்கள்.