புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Siva
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (07:26 IST)

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இவரா? ரூ.60 லட்ச ரூபாய் வீடு பெற்ற அதிர்ஷ்டசாலி..!

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியில் டைட்டில் பட்டம் வென்றவர் அருணா என அறிவிக்கப்பட்டது.
 
ஆரம்பம் முதலே அசத்தலாக அருணா பாடி வந்தார் டைட்டில் பட்டதை வென்றதோடு 60 லட்சம் வீடு மற்றும் 10 லட்ச ரூபாய் பரிசை பெற்றார். டைட்டில் வின்னர் அருணா என்பதை இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நேற்று அறிவித்தார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தை பெற்றவர் பிரியா என்பதும் மூன்றாம் இடத்தை பிரசன்னா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட பூஜா மற்றும் அபிஜித் ஆகிய இருவருக்கும் முதல் மூன்று இடங்களில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 
 
Edited by Siva