1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (14:57 IST)

''வாரிசு விவகாரம்''...ராம்சரண் பற்றி நடிகர் நானி கூறிய கருத்தால் சர்ச்சை

nani
வாரிசு நடிகர்கள் பற்றி தெலுங்கு நடிகர் நானி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகர்  நானி. இவர்  கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான அஷ்ட சம்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இதையடுத்து, வெப்பம், ராஜமெளலி இயக்கத்தில் நான் ஈ, ஷ்யாம் சிங்கா ராய், ஜெஸ்ஸி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

தற்போது, தசரா என்ற படத்தில், நடித்துள்ளார். இப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்,  தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிஜம் வித் ஸ்மிதா என்ற ஷோவில், நானி மற்றும் ராணா டகுபடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, நானியிடம் வாரிசு விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், என் நடிப்பில் வெளியான  முதல் படத்தை 1 லட்சம் பேர் பார்த்துள்ளனர்,. ஆனால், ராம் சரணின் முதல் படத்தை பல கோடிப் பபேர் பார்த்துள்ளனர்.

நானி, நடிகர் ராம்சரணுடன் ஒப்பிட்டு பேசியது, வாரிசு பற்றி  அவர் தெரிவித்த கருத்தும் ராம் சரண் பற்றிய கருத்துக்கு அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆர்.ஆர்.ஆர்  பட ஹீரோ நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.