திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:12 IST)

பணியாளர் வைத்திருந்த செருப்பு...சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா

Roja
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆந்திர மா நிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அம்மா நிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. இவர்  அங்குள்ள, சூர்யா லங்காவின் சுற்றுலாத்தளத்திற்குச் சென்றார். அதன்பின்னர்,  கடல் நீரில் இறங்கி இன்று கடற்கரையில் நடந்தார்.

அப்போது, அவரது செருப்பை பணியாளர் ஒருவரிடம் கொடுத்திருந்தார். இதுகுறித்த வீடியோ, மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால்  நடிகை ரோஜா மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

அவரது செருப்பை எப்படி பணியாளார் கையில் கொடுக்கலாம் என நெட்டிசங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.