ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:27 IST)

ஆஸ்கர் விருது இறுதிப் பட்டியலில் '' நாட்டுக்குத்து'' பாடல்- கீரவாணி வாழ்த்து

nattu kuththu-  rrr
ஆஸ்கர் விருதிற்கான இறுதிப் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் பட பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து  2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டது.

ஆனால், இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினியல் பாடல் பிரிவில் இப்படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் தகுதிபெற்று, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் இடம்பெற்ற  நாட்டுக் குத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது வென்றது.

இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்த படி, ஆஸ்கர் விருதிற்கான இறுதிப் பட்டியலில், இப்பாடல் இடம்பெற்றுள்ளதாக ஆர்.ஆர்.ஆர் படக்குழு அறிவித்துள்ளது.

நாட்டுக்குத்துப் பாடலுக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் பாடல் எழுதியுள்ளார். ராகுல், காலா ஆகியோர் பாடியுள்ளனர். பிரேம் ராக்ஷித் இப்பாடலுக்கு  நடனம் அமைத்துள்ளார்.

எனவே இசையமைப்பாளர்  கீரவாணி தன் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.