வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 ஜூலை 2022 (15:05 IST)

அனிருத்தை பாராட்டிய பிரபல இசைமைப்பாளர்..ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல தென்னிந்திய  இசைப்பாளர்  ராக்ஸ்டார் அனிருத்தைப் பாராட்டியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மரகதமணி. இவர் ராஜமெளலியின் நான் ஈ,பாகுபலி, பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அடுத்து கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகவுள்ள ஜென்டில்மேன் -2   என்ற படத்திற்கு அவர் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில்.  தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை அவர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளத்தில், அனிருத் சிறந்த இசையமைப்பாளர், எதிலும் புதுமையானவர். , டான் படத்தில் இடபெற்றுள்ள ‘பே ‘பாடல் போதை தரக்கூடிய வகையுள்ளது. என்று தெரிவித்தார்.

keeravani music director

இதற்கு அனிருத் ஐ லவ் யூ சார் என்று ரீ டுவீட்  பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான படம் டான். இப்படத்தின் ஆதித்யா பாடிய பாடல்தன் பே ஆகும். இது டிரெண்டிங்கிலுள்ளது.