செவ்வாய், 24 ஜனவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:53 IST)

'வாரிசு’ வசூல் தகவலை ஒரே வரியில் வீழ்த்திய ‘துணிவு’ தயாரிப்பாளர்!

Thunivu
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் வசூல் விபரங்களை அவ்வப்போது அந்த படத்தின் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட 250 கோடி ரூபாய் வாரிசு வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் துணிவு படத்தின் வசூல் குறித்த விபரங்களை டிராக்கர்கள் தான் தெரிவித்து வருகின்றார்களே தவிர படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 
 
இந்த நிலையில் துணிவு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராகுல் தனது பக்கத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் புகைப்படம் துணிவு என்று பதிவு செய்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வாரிசு பட வசூலின் விவரங்களை தூள் தூளாக்கி விட்டதாக அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva