செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (15:55 IST)

அசீம் வெற்றியாளர் ஆனது கமலுக்கே பிடிக்கலையாம்?

தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்  6 நிகழ்ச்சியின் வின்னராக நடிகர் அசீம் தேர்வு செய்யப்பட்டு 50 லட்சம் பரிசு தொகை மற்றும் சுசுகி கார் இத்துடன் தின சம்பளம் அள்ளிக்கொண்டு சென்றார். 
 
அசீம் வெற்றியாளர் ஆனது பெரும்பாலும் யாருக்கும் பிடிக்கவில்லை. அவர் இதற்கு தகுதியற்றவர் விக்ரமன் தான் வெற்றியாளர் ஆகியிருக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். 
 
இப்படியான நேரத்தில் கமல் அசீம் வெற்றியாளர் என அறிவித்த பின்னர் விக்ரமன் உடன் நெருக்கமாக கட்டியணைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கமலுக்கே அசீம் வெற்றியாளர் ஆனது பிடிக்கவில்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது. நிச்சயம் ஏதேனும் நிபந்தனையால் அறிவித்திருப்பார் என தெரிவித்து வருகிறார்கள் மக்கள். 
 
மக்கள் பலரும் அசீம் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் 
கமல்ஹாசனுக்கும் அசீம் வெற்றிப்பெற்றது பிடிக்கவில்லை, அவர் சில காரணத்தால் தான் வெற்றியாளரை அறிவித்திருப்பார், இந்த புகைப்படம் அதனை வெளிப்படுத்துகிறது என ஒரு ரசிகர் கமெண்ட் போட்டிருக்கிறார்.