திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (08:41 IST)

லியோ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வீட்டில் நடந்த துயர சம்பவம்!

விஜய் இப்போது லோகேஷ் இயக்கி வரும் லியோ படத்துக்காக காஷ்மீரில் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தற்போது காஷ்மீரில் முகாமிட்டு படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் இயற்கை எய்தியுள்ள நிலையில் காஷ்மீரில் இருந்து அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார்.