திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (18:15 IST)

இனி ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: முதல்வர் அதிரடி உத்தரவு!

இனி ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகநாதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திரையரங்குகளில் டிக்கெட் விற்பதால் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அதிகப்படியான பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் இதனை அடுத்து முழுக்க முழுக்க திரையரங்குகளில் ஆன்லைன் மூலமே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
 
ஆந்திர மாநில திரைப்படம் தொலைக்காட்சி மற்றும் தியேட்டர் மேம்பாட்டு கழகம் இந்த ஆன்லைன் டிக்கெட் முறையை நிர்வாகம் செய்யும் என்றும் அதிகப்படியான விலைக்கு டிக்கெட் விற்பனை தடுப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
முதல்வரின் இந்த அறிவிப்பு தெலுங்கு சினிமா துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான குழு விரைவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.