திறக்கப்படும் சபரிமலை - இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு, நிபா வைரஸ் ஆகியவை அதிகரித்து வரும் நிலையிலும் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது.
ஆம், செப்டம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே சபரிமலையை தரிசிக்க இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும், தினசரி 10,000 பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.