1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 மே 2023 (17:14 IST)

ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. - சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

sarthbabu -kamalhasan
கடந்த 1973 ஆம் ஆண்டு நடிகர் சரத்பாபு  தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சரத்பாபு அறிமுகமானார். 70, 80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
.
நடிகர் சரத்பாபு உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் திடீரென அவர் காலமானதாக சில நாட்களுக்கு முன் வதந்தி பரவியது .இதையடுத்து அவரது குடும்பத்தினர் இது குறித்து விளக்கம் அளித்தனர். அதில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினர்.

இந்த நிலையில் , இன்று  அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார் என்று அறிவித்துள்ளனர். எனவஎ  நடிகர்  சரத்பாபுவின் மறைவிற்கு திரைஉலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமவின் மூத்த நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.

அவருக்கு என் அஞ்சலி’’ என்று தெரிவித்துள்ளார்.