75 நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க திட்டம்! – சீயான்60 அப்டேட்!
நடிகர் விக்ரமை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் தலைப்பிடப்படாத படம் சீயான் 60. துருவ் விக்ரமிற்கு ஆதித்ய வர்மாவிற்கு பிறகான படம் இது என்பதாலும், விக்ரமின் 60வது படம் என்பதாலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன, இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை 75 நாட்கள் ஷூட்டிங்கை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.