தொடர்ந்து அஜித் படங்களைக் குறிவைக்கும் சிரஞ்சீவி… வேதாளத்தை தொடர்ந்து இந்த படமா?
சிரஞ்சீவி தொடர்ந்து ப்ளாப் படங்களாக கொடுத்து வரும் நிலையில் இப்போது வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
அஜித் நடித்த வேதாளம் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்துக்காக இப்போது சிரஞ்சீவி மொட்டை அடித்து கெட்டப் மாற்றியுள்ளார். இந்த படம் முடிந்ததும் மீண்டும் அஜித்தின் மற்றொரு ஹிட் படமான விஸ்வாசம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை வி வி வினாயக் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.