சிரஞ்சீவி - நயன்தாராவின் ‘காட்ஃபாதர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிரஞ்சீவி நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிய காட்பாதர் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படமான லூசிபர் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் காட்பாதர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சிரஞ்சீவி நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் தொடங்கி நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் சிங்கிள் படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்