செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:03 IST)

அது ஆணா பெண்ணா பாருங்க...? வயசு அப்றோம் கேட்கலாம் - வைரமுத்துவின் வீடியோ வெளியிட சின்மயி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். பிறகு சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.  
 
தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  
 
இப்படி சின்மயி மற்றும் வைரமுத்து விஷயத்தில் பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வைரமுத்துவை ஒருவர் ‘ஐ லவ் யூ’ என்று கூற, அதனை படித்து காண்பிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். உடனே, வைரமுத்து, அது ஆணா ? பெண்ணா? என்று பாருங்க அப்புறம் வயசை கேட்டுக்கலாம் என்று சொன்னதும் இருவரும் சிரிக்கின்றனர்.  பின்னர் ஏ.ஆர் ரஹ்மான் வைரமுத்துவிடம் நீங்க பேசுறது எல்லாம் போகுது உலகம் முழுக்க என சொன்னதும் ஹோ போகுதா என கேட்கிறார்.  இந்த வீடியோவை வைரமுத்துவின் உண்மை முகத்தை வெளிக்காட்டி வெளியிட்டுள்ளார்.