ஆமா...இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல - விஜய் ரசிகர்களை விமர்சித்த சின்மயி!

papiksha| Last Updated: புதன், 13 நவம்பர் 2019 (11:34 IST)
மீடூ என்று சொன்னவுடன் சட்டென்று எல்லோருடைய நியாபகத்திற்கு வருபவர் பாடகி சின்மயி தான். அந்த  அளவிற்கு கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரபலங்களை விமர்சித்து ட்விட் போட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். அதிலும் குறிப்பாக பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது மீடூ புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 
இந்த சம்பவம் நடைபெற்றதிலிருந்து பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை பற்றி சின்மயியிடம் கூற அதை தனது ட்விட்டரில் பதிவிட்டு சமூகம் அறிய செய்து வருகிறார் சின்மயி. இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே விஜய் ரசிகர்கள் சின்மயி பற்றி பதிவிட்டு அவரை கிண்டலடித்து செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு  பதிலளிக்கும் வகையில்,  “உங்களுக்கு ஆள் பலம், ட்ரோல் பலத்துக்குக் எல்லாம் குறைச்சல் இல்லை” என விஜய் ரசிகர்களை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பலரும் சின்மயிக்கு ஆதரவாக இருந்தாலும் விஜய் ரசிகர்கள் தீயில் ஊற்றிய நெய் போல முன்பை விட அதிகமாக சின்மயியை ட்ரோல் செய்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :