1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (18:03 IST)

எனது இரட்டை குழந்தைகளை நானே தான் பெற்றெடுத்தேன்: ஆதாரத்தை வெளியிட்ட பிரபலம்!

chinmayi
எனது இரட்டை குழந்தைகளை நானே தான் பெற்றெடுத்தேன்: ஆதாரத்தை வெளியிட்ட பிரபலம்!
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல பாடகி சின்மயி தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற வில்லை என்றும் நானேதான் பெற்றெடுத்தேன் என்றும் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். 
 
சமீபத்தில் பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்ததாக வதந்தி பரவியது. இதனை அடுத்து இந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் பாடகி சின்மயி தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
 
தான் கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட  ஒரே புகைப்படம் இதுதான் அப்போது தான் 32 வார கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற வில்லை என்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
Edited by Siva