1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (18:43 IST)

''துணிவு'' பட முதல் சிங்கில் #ChillaChilla ரிலீஸ்

Thunivu
துணிவு படத்தின் முதல் சிங்கில் சில்லா சில்லா என்ற பாடல்  ரிலீஸாகி வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வலிமை படத்திற்கு பின் துணிவு படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுதியுள்ளார், அனிருத் பாடியுள்ளார்.

இப்பாடல் இன்று மாலை  5 மணிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சற்று தாமதாக மாலை 6:30க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், துணிவு பட முதல் சிங்கில் #ChillaChilla -பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடல் ஜீ ஸ்டுடியோஸின் யூடியூப் தளத்தில் வெளியாகி  இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இப்பாடலில், ''நம்மலோட வேலையப் பாத்து ஊரு பேசு தானா....இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா எல்லா வரும் தானா''  என்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது ஜிப்ரானின் 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Edited By Sinoj