1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (21:50 IST)

தமன் இசையில்....ஜெய் பாலய்யா பட முதல் சிங்கில் இணையதளத்தில் டிரெண்டிங்

jay balaiya
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பாலய்யா படத்தின் பாடல் நேற்று வெளியாகி 1 கோடி பார்வையாளர்களை நெருங்கியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஸ்ணா. இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அகன்டா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவித்தது.

இதையடுத்து, இவர் நடிப்பில் 107  படமாக உரருவாகியுள்ள படம் ஜெய் பாலய்யா. இப்படத்தைப கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். வரலட்சுமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வாரிசு பட இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஜெய்பாலய்யா  பட முதல் சிங்கில் நேற்று வெளியாகி   ஒரே நாளில் 93 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று, இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

ஜெய்பாலய்யா படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj