சென்னையில் மட்டும் தியேட்டர்கள் திறந்திருக்கும் – அபிராமி ராமநாதன் அறிவிப்பு
நாளை முதல் சென்னையில் மட்டும் தியேட்டர்கள் திறந்திருக்கும்’ என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், பெரிய தியேட்டர்களில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.
ஆனால், இந்த ஸ்டிரைக்கில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என சென்னை மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் அபிராமி ராமநாதன், “சென்னையில் உள்ள 147 தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டாக சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். சென்னையில் உள்ள மல்ட்டிபிளெக்ஸ் மற்றும் நகர தியேட்டர்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.