செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (08:01 IST)

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயங்குமா?

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஒருசில விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னை பெங்களூர் துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதே போல் சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டதாக தென்னிந்திய தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் இரு மார்க்கங்களிலும் இன்று ரயில்கள் ரத்து இயங்காது என்றும் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களுடைய கட்டண தொகை திருப்பி செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து போக்குவரத்துகளும் இன்று முடங்கியுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் விடுமுறை கால அட்டவணைப்படி பத்து நிமிடத்துக்கு ஒரு முறை என்ற வீதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
எனவே அவசர தேவைக்காக பயணம் செய்பவர்கள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது