திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (13:42 IST)

பைத்தியத்திற்கு வைத்தியம் பாருங்கள்.! பாடகி சுசித்ராவை மறைமுகமாக தாக்கிய வைரமுத்து.!!

Vairamuthu
தன் மீது பாலியல் புகார் சுமத்தி வரும் பாடகி சுசித்ராவை மறைமுகமாக தாக்கி, தனது சமூக வலைதள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி ஏற்கனவே பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது பாடகி சுசித்ராவும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ந்து பேசி வருகிறார்.
 
பாடல் கம்போசிங் என்று சொல்லி பலமுறை என்னை தனியாக சந்திக்க வைரமுத்து அழைத்ததாகவும்,  ஒவ்வொருமுறையும் அவரது போன் காலை கட் பண்ணி சரியாக மூக்கை உடைத்துவிட்டேன் என்றும் சுசித்ரா பேசியிருந்தார்.
 
மேலும் என்னை தொட்டுப் பார்க்க பரிசு தருவதாக வீட்டிற்கு அழைத்ததாகவும், அதனாலேயே பாட்டியுடன் சென்றதாகவும் சுசித்ரா கூறியிருந்தார். பரிசு தருவதாக கூறி தனக்கு ஷாம்பு பாட்டிலை  வைரமுத்து கொடுத்ததாக சுசித்ரா கிண்டலாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
இந்நிலையில் தன் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் சுசித்ராவை மறைமுகமாக தாக்கி கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
 
அதில், வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய் 
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
 
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம் 
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
 
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
 
இந்த நோய்க்கு 
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்
 
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்

 
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.