வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:25 IST)

அமைச்சர் துரைமுருகன் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம்-கவிஞர்வைரமுத்துபேச்சு.

வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகமும்
பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றமும் 
இணைந்து
விஐடி வேந்தர் ஜி .விஸ்வநாதன் தலைமையில்,
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா
நடைபெற்றது .
 
இந் நிகழ்ச்சியில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,
துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மக்களவை உறுப்பினர் கனிமொழி,
கவிஞர் வைரமுத்து,மற்றும்
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
உள்பட பலர் பங்கேற்றனர்.
 
அப்போது  பேசிய அமைச்சர் துரைமுருகன்......
 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த நிறைவேற்றியவர்,
பிச்சைக்காரர்கள் மற்றும் தொழு நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தினார்.
 
கருணாநிதி அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் மனிதாபிமான மனிதராகவும் இருந்தார்.
 
பிறருக்கு  கருணை காட்டக் கூடிய வகையில் இரக்கம் உள்ளவராக இருந்தார்.
ஒரு தலைவன் ஒரு தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கருணாநிதி திகழ்ந்தார்.
 
கருணாநிதி வைராக்கியம் மற்றும் கொள்கை பிடிப்புடன் இருந்த காரணத்தினால் தான் அகில இந்திய அளவில் அவர் புகழ் பெற்றவராக இருந்தார்.
என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
 
இதனை தொடர்ந்து பேசிய கனிமொழி.......
 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தன்னுடைய கொள்கைகளை விட்டு கொடுக்காமல் உறுதியுடன் கடைசி வரை வாழ்ந்தவர்.
 
சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து,
அன்பு காட்டியவர்.
 
விவசாயிகள் பெண்கள் திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர்.
 
குறிப்பாக நாட்டிலேயே திருநங்கைகளுக்கு தனி வாரியம் அமைத்து அவர்கள் படிக்கவும்
குடும்ப அட்டைகளையும் வழங்கியவர் .
முதன்முதலாக
குடிசை மாற்று வாரியம்
அமைத்தவர். விவசாயிகளுக்கு இலவசம் மின்சார திட்டம், பெண்கள் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக திருமண நிதி உதவி உள்ளிட்ட ம் பல திட்டங்களை கொண்டு வந்தவர்.
தேவை, நியாயம் இருக்கும் போது மத்திய அரசுக்கு கை கொடுப்போம் என்றும்
உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று 
கொள்கையில் வாழ்ந்தவர்.
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்களை
சந்தித்து வெற்றி பெற்றவர்.
மாணவர்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போல் தோல்விகளை கண்டு பயப்படாமல் துணிந்து நின்று சாதிக்க நினைத்தால் வெற்றி பெறலாம் என்று கனிமொழி பேசினார்.
 
பின்னர் பேசிய கவிஞர் வைரமுத்து......
 துரைமுருகனும்,
ரஜினியும் நகைச்சுவையாளர்கள் 'இரண்டு நகைச்சுவைகளும் முட்டிக்கொண்டது. ஒருபக்கம் நடிகர் ரஜினி என்னுடைய நண்பர் மறுபக்கம் அமைச்சர் துரைமுருகன் ஆரூயிர் நண்பர், இவர்கள் இருவரும் ஆளுக்கொரு நகைச்சுவையை சொன்னார்கள் அது ரொம்ப சோகமாக பேசப்பட்டு, இன்று அந்த நகைச்சுவை உச்சத்துக்கு வந்துவிட்டது. 
 
இன்று அந்த நகைச்சுவைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,
நகைச்சுவையை யாரும் பகைச்சுமையாய் பயன்படுத்த வேண்டாம் என்று  பேசினார்.