வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (15:07 IST)

இனி 5 வகையான சென்சார் சான்றிதழ்கள்… மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியாவில் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு மத்திய அரசுன் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கி வருகிறது. இதுவரை U, UA, A ஆகிய மூன்று பிரிவுகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் U சான்றிதழ் வழங்கப்படும் படங்களை அனைவரும் பார்க்கலாம். UA சான்றிதழ் வழங்கப்படும் படங்களை குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அறிவுரையோடு பார்க்கலாம். A சான்றிதழ் வாங்கும் படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

இந்நிலையில் இப்போது UA சான்றிதழை மூன்றாக பிரித்து UA 7+, UA 13+, UA 16+ என தனித்தனி பிரிவுகளாக பிரித்து சென்சார் சான்றிதழ் வழங்க உள்ள புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.