1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (11:35 IST)

இனி U, A உள்பட 5 வகைகளாக தணிக்கை சான்றிதழ்: மத்திய அரசு அதிரடி முடிவு..!

திரைப்படங்களுக்கு தற்போது யு, யுஏ மற்றும் ஏ என மூன்று வகை தணிக்கை சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
திரைப்படங்களுக்கு இனிமேல் U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வழியாக உள்ளன 
 
ஐந்து வகையாக தணிக்கை சான்றிதழ் வழங்கும் புதிய ஒளிபரப்பு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
U/A 7+, U/A 13+, U/A 16+,  ஆகிய மூன்று விதமான புதிய தணிக்கை சான்றிதழுக்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva