புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (16:40 IST)

இனிமே சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்னா இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும்...

சினிமாவுக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வழங்குவதில், பல புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.




சினிமாவுக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வழங்கும் சென்சார் போர்டு, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘சென்சார் சர்ட்டிஃபிகேட் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அதைப் பரிசீலிக்க ஒரு வாரமும், ஆய்வுக்குழு அமைக்க 15 நாட்களும், ஆய்வு அறிக்கையை சென்சார் போர்டு தலைவருக்கு அனுப்ப 10 நாட்களும், விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்க 3 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை ஒப்படைக்க 14 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வுசெய்ய 14 நாட்களும், சர்ட்டிஃபிகேட் வழங்க 5 நாட்களும் எடுத்துக் கொள்ளும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால், ஒரு படத்துக்கான சென்சார் சர்ட்டிஃபிகேட் பெற குறைந்தது 68 நாட்களாகும். எனவே, இனிமேல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சென்சாருக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில அறிவுரைகளையும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
‘சென்சார் போர்டைச் சேர்ந்த எந்த ஒரு அதிகாரியையும் தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளக் கூடாது. தங்கள் படத்தின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக யூஸர் நேம், பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்களுக்கு சென்சார் போர்டு அதிகாரிகளுடம் நெருக்கம் இருக்கிறது, விரைவாக சர்ட்டிஃபிகேட் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி யாராவது பணமோ அல்லது வேறு உதவியோ கேட்டால், அவர்களைப் பற்றி சென்சார் போர்டு தலைவரிடமோ அல்லது தலைமை செயல் அதிகாரியிடமோ புகார் அளிக்கலாம். படங்களுக்கு சர்ட்டிஃபிகேட் வழங்குவதில் எந்தவிதமான தலையீட்டையும் சென்சார் போர்டு அனுமதிக்காது’ என கூறப்பட்டுள்ளது.