50 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த புல்லட் பண்டி பாடல்!
சமீப காலமாக திரைப்பாடல்களை விட தனி ஆல்ப பாடல்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.
எஞ்சாயி எஞ்சாமி என்ற ஆல்பம் பாடல் தமிழில் உருவாகினாலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் அந்த பாடலை உருவாக்கியவர்களில் சந்தோஷ் நாராயணனைத் தவிர வேறு யாரும் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை. இதனால் இப்போதி நிறைய ஆல்பம் பாடல்கள் உருவாகி வருகின்றன.
அந்த வகையில் இப்போது தெலுங்கில் வெளியாகி புல்லட் பண்டி என்ற பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனைப் படைத்துள்ளது.