செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (16:46 IST)

தன்னை கேலி செய்த மீம்ஸை பகிர்ந்த வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் சமுகவலைதளங்களில் அதிகமாக கேலி செய்யப்படும் ஒருவராக இருந்து வருகிறார்.

நடிகர்கள் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மகளான நடிகை வனிதாவை சுற்றி மிகப்பெரிய சர்ச்சைகள் உலவி வந்துகொண்டுள்ளன.  இதுகுறித்து அவரை கேலி மற்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் இது சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.

அதையடுத்து இப்போது அவர் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதையடுத்து அவர் சமூகவலைதளங்களிலும் ஒரு பிரமுகராகிவிட்டார். ஆனால் அவரை பற்றிய மீம்ஸ்களுக்கும் ட்ரோல்களுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் தன்னை பற்றிய ட்ரோம் மீம் ஒன்றை தன்னுடைய பகிர்ந்துள்ளார்.