புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:29 IST)

நடிகை ராதிகா ஆப்தேவுக்கு தடைவிதிக்க வேண்டும்… திடிரென்று ட்ரண்டாகும் ஹேஷ்டேக்குகள்!

நடிகை ராதிகா ஆப்தே தனது படங்களின் மூலம் கலாச்சாரத்தைக் கெடுப்பதாகவும் அதனால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன.

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. தமிழில் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இப்போது இந்தியாவில் ஓடிடி நடிகை என சொல்லப்படும் அளவுக்கு பல நேரடி ஓடிடி படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. ஆனால் நாட்டில் மதக் கலவரங்களை ராதிகா ஆப்தே கடுமையாக கண்டித்து வருவதால் இந்துத்துவ வாதிகள் மத்தியில் இவருக்கு அவ்வப்போது எதிர்ப்புகள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் இப்போது ராதிகா ஆப்தே தனது நடிப்பின் மூலம் இந்திய கலாச்சாரத்தைக் கெடுப்பதாகவும், அதனால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திடிரென்று ஒரு ஹேஷ்டேக் வைரல் ஆகி வருகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு முஸ்லிம் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி தாக்கப்பட்ட சம்பவத்தை திசை திருப்பவே இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.