நடிகர் மம்மூட்டிக்கு விழா எடுக்கும் கேரள அரசு!
நடிகர் மம்மூட்டி சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு அம்மாநில அரசு விழா எடுக்க உள்ளது.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரும் இந்திய சினிமாவிலேயே அதிக தேசிய விருதுகளையும் பெற்ற மம்மூட்டி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கூறியுள்ளார். 1971 ஆம் ஆண்டு ஒரு துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமான மம்மூட்டி இப்போது வரை பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் 50 ஆண்டுகளை கடந்து நடித்து வரும் அவரைப் பாராட்டும் விதமாக கேரள மாநில அரசு அவருக்கு விழா எடுக்க உள்ளது.