வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (09:34 IST)

6 years of வாலு: படத்தில் ஆரம்பித்த காதல் பாழா போனது!

விஜய் சுந்தர் இயக்கத்தில் 2015இல் வெளியாகிய திரைப்படம் வாலு. நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தார்.  நீண்ட நாள்களாக வெளிவராதிருந்த இத்திரைப்படம் ஒருவழியாக ஆகஸ்ட் 14, 2015ல் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. 
 
இந்த திரைப்படத்தின் போது சிம்பு ஹன்சிகா மீது காதல் வயப்பட உடனே அவரும் ஓகே சொல்லியது  கோலிவுட்டில் கும்பல் கூடி பேசப்பட்டது. ஆனால், அந்த பட வேலைகள் முடிவதற்குள் அந்த காதலும் முறிந்துவிட்டது. பின்னர் காதல் முறிவு குறித்து மனம் திறந்த சிம்பு, இந்த காதல் முறிய நானோ, ஹன்சிகாவோ காரணம் இல்லை. அவரை திருமணம் செய்து கொண்டு அஜித், ஷாலினி தம்பதி போன்று ஒற்றுமையாக வாழ விரும்பினேன் என்று மிகுந்த சோகத்துடன் கூறினார். 
 
அதன் பின் ஹன்சிகா படங்களில் கவனம் செலுத்த சிம்பு ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 6வது ஆண்டை நிறைவு செய்துள்ளதை 6 years of வாலு என இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.