1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:04 IST)

HBD கிஷோர்: நல்ல நடிகனையும் தாண்டி சிறந்த மனிதர்!

வில்லன், ஹீரோ, குணசித்திர நடிகர் என எந்த ரோல் கிடைத்தாலும் கதைக்கு அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தால் அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுபவர் நடிகர் கிஷோர். கன்னட நடிகரான இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் நடித்த தமிழ் படங்கள், பொல்லாதவன் , ஆடுகளம், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்கள் மிகச்சிறந்த படங்கள் என   முத்திரை குத்தப்பட்டது. ஒரு நடிகனாக மட்டும் சிறந்து விளங்காமல் நல்ல மனிதனாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 

சினிமாவையும் தாண்டி விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் நடிகர் கிஷோர் கர்நாடகாவில் ஒரு சாதாரண வீட்டில் மிகவும் எளிமையாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். அங்கு விவசாயம் , மாடு வளர்ப்பு , தோட்டம் , ஏர் உழுதல் என தனது மகன்களுக்கு எளிமையான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கிறார். இந்நிலையில் இன்று தனது 47வது பிறந்தநாள் கொண்டாடும் கிஷோருக்கு வாழ்த்துக்கள் கூறி ட்ரெண்ட் செய்துள்ளனர் ரசிகர்கள்.