ஆர் ஆர் ஆர் பட ரிலீஸால் அதிருப்தியில் போனி கபூர்!
நடிகர் அஜய் தேவ்கான் நடித்துள்ள இரண்டு படங்கள் 3 நாட்கள் இடைவெளியில் வெளியாக இருப்பது தயாரிப்பாளர் போனி கபூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் திரைப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 15 என்று படக்குழு முன்னதாகவே அறிவித்து விட்டது. அதற்கான வேலைகளும் இப்போதிருந்தே தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் அஜய் தேவ்கான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தியாவே எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் அக்டோபர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தன் படத்தை ரிலீஸ் செய்வதில் பாதிப்பு ஏற்படுமோ என்று போனி கபூர் ஆர் ஆர் ஆர் படக்குழுவினர் மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.